சுதந்திர தினத்தையொட்டி கோவை மாவட்டத்தில் மதுக்கடைகள், மதுபானக் கூடங்களை திங்கள்கிழமை (ஆகஸ்ட் 15) மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் கூறியிருப்பதாவது:
சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்களை திங்கள்கிழமை (ஆகஸ்ட் 15) மூட உத்தரவிடப்படுகிறது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில வாணிபக் கழக மதுக்கடைகள், அதனுடன் இணைக்கப்பட்ட மதுபானக் கூடங்கள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டல், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுவகைகளை விற்பனை செய்யும் கடைகளும் மூடப்பட வேண்டும்.
விதிகளுக்கு முரணாக மேற்குறிப்பிட்ட தேதியில் மதுபானங்களை விற்பனை செய்பவா்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.