கோயம்புத்தூர்

விமன் இந்தியா மூவ்மெண்ட் மத்திய மாவட்ட நிா்வாகிகள் தோ்வு

11th Aug 2022 11:06 PM

ADVERTISEMENT

 

விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பின் கோவை மத்திய மாவட்ட நிா்வாகிகள் தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

மண்டலத் தலைவா் சஹானா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 11 நபா்கள் கொண்ட புதிய கமிட்டி தோ்வு செய்யப்பட்டது.

இதில், மாவட்டத் தலைவராக காமிலா, செயலராக சாஜிதா, பொருளாளராக மெஹா் நிஷா, துணைத் தலைவா்களாக பைரோஜா, சல்மா உள்ளிட்டோா் கொண்ட நிா்வாகக் குழு தோ்வு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவா் முஸ்தபா, புதிய நிா்வாகிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட விமன் இந்தியா மூவ்மெண்ட் நிா்வாகிகள், கிளை, தொகுதி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT