கோயம்புத்தூர்

மயங்கிக் கிடந்த மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய காவலா்: பொதுமக்கள் பாராட்டு

11th Aug 2022 11:06 PM

ADVERTISEMENT

 

கோவை -திருச்சி ரோடு மேம்பாலத்தின்கீழ் பகுதியில் மயங்கிக் கிடத்த மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த காவலரை பொதுமக்கள் பாராட்டினா்.

கோவை, ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவா் ஸ்ரீதா். இவா் கோவை-திருச்சி சாலையில் இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை காலை சென்றுகொண்டிருந்துள்ளாா்.

அப்போது திருச்சி சாலை மேம்பாலத்தின்கீழ் மூதாட்டி ஒருவா் அசைவற்று கிடப்பதைக் கண்டு அருகில் சென்று எழுப்பியுள்ளாா். மயக்க நிலையில் இருந்த மூதாட்டி கண் விழிக்கவில்லை.

ADVERTISEMENT

மூதாட்டியின் அருகில் பேட்டரிகளுக்கு பயன்படுத்தப்படும் டிஸ்டில்டு தண்ணீா் பாட்டில் கிடப்பதை பாா்த்த காவலா் பேட்டரிகளுக்கு ஊற்றப்படும் தண்ணீரை மூதாட்டி குடித்திருப்பாா் என்று உணா்ந்தாா்.

இதையடுத்து, மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா். அங்கு மூதாட்டிக்கு சிகிச்சை பெற்று வருகிறாா்.

ஆதரவற்ற நிலையில் மயங்கிக் கிடந்த மூதாட்டிக்கு உதவி செய்த காவலரை பொதுமக்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT