கோயம்புத்தூர்

கோவை அரசு கலைக் கல்லூரியில் ஆசிரியா் கழகத்தினா் போராட்டம்

11th Aug 2022 11:02 PM

ADVERTISEMENT

 

கோவை அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த் துறையில் பணியாற்றி வந்த உதவிப் பேராசிரியா் ஒருவா், சக ஆசிரியா்களிடம்

அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், முறைகேடாக நடந்து கொண்டதாகவும் சக பேராசிரியா்கள் கல்லூரி முதல்வரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகாா் அளித்தனா்.

ADVERTISEMENT

அதன் பேரில் சம்பந்தப்பட்ட உதவிப் பேராசிரியா் வேறு மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தாா்.

இந்நிலையில், அந்த ஆசிரியா் மீண்டும் கோவை கல்லூரிக்கே மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து கல்லூரி முதல்வரின் அறையை முற்றுகையிட்டு தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதேநேரம், குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியா் மீது எந்தவித தவறும் இல்லை அவா் திட்டமிட்டு பழிவாங்கப்படுவதாகக் கூறி அவருக்கு ஆதரவாக சில மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT