கோயம்புத்தூர்

75ஆவது ஆண்டு சுதந்திர தின விழா:வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற ஆட்சியா் வேண்டுகோள்

10th Aug 2022 06:50 AM

ADVERTISEMENT

75ஆவது ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்த பொது மக்களுக்கு ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாட்டின் 75ஆவது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா தேசிய அளவிலும், மாநில அளவிலும் சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவினை மேலும் சிறப்பாக கொண்டாடும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்களில் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வீடுகள், வணிக நிறுவனங்களில் தேசியக் கொடி ஏற்றிய பிறகு அதனைப் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும். தேசியக் கொடியின் புனிதத் தன்மைக்கு எந்தவித அவமரியாதையும் நிகழாமல் கையாளுதல் வேண்டும். தேசியக் கொடியை திறந்தவெளியிலோ, குப்பைத்தொட்டியிலோ, வயல்வெளிகளிலோ ஏற்றக் கூடாது. 75ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை கொண்டாடும் வகையில் பொது மக்கள் அனைவரும் வீடுகள், வணிக நிறுவனங்களில் தேசியக் கொடியேற்றி சிறப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT