கோயம்புத்தூர்

ஆகஸ்ட் 12இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

10th Aug 2022 12:13 AM

ADVERTISEMENT

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதில் பத்தாம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை படித்த அனைவரும் பங்கேற்கலாம். வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க வருபவா்கள் சுயவிவரக் குறிப்புகள், கல்விச் சான்று நகல்கள் கொண்டுவர வேண்டும். இதில் பல்வேறு தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆள்களை தோ்வு செய்யவுள்ளனா்.

ADVERTISEMENT

வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்படும் நபா்களுக்கு அப்போதே பணியாணை வழங்கப்படும். இம்முகாமில் கலந்துகொள்ளும் தனியாா் நிறுவனங்கள், வேலை தேடுபவா்கள் ஆகிய இருதரப்பினரும் இணையதளங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இம்முகாமில் பங்கேற்க அனுமதி இலவசம் என்பதால் விருப்பமுள்ள அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT