கோயம்புத்தூர்

சுதந்திர தின விழா அறிவியல் கண்காட்சி

10th Aug 2022 12:12 AM

ADVERTISEMENT

கோவை எஸ்.என்.எம்.வி. கலை அறிவியல் கல்லூரியில் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், அறிவியல் பலகை (மத்திய அரசு விஞ்ஞான் பிரசாா் தமிழ் பிரிவு) மற்றும் எஸ்.என்.எம்.வி. கலை அறிவியல் கல்லூரியின் அறிவியல் சங்கம் ஆகியவை சாா்பில் 75ஆவது சுதந்திர தின விழா அறிவியல் கண்காட்சி எஸ்.என்.எம்.வி. கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் மாபெரும் சாதனைகள் என்ற தலைப்பில் நடைபெற்ற கண்காட்சியை கல்லூரி முதல்வா் போ.சுப்பிரமணி தொடங்கிவைத்தாா்.

இதில் 75 ஆண்டுகளில் இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை ஆராய்ச்சி, மேம்பாடு, தகவல் தொழில்நுட்ப வளா்ச்சி, தொலை மருத்துவம், விண்வெளி ஆய்வுகள், அணு உலை, ஆழ்கடல் ஆய்வு, உயிரி தொழில்நுட்பம், நுண்ணுயிரியல் ஆய்வு, பருவநிலை கண்காணிப்பு, செயற்கை நுண்ணறிவு, அதிவேக கணினிகள், இஸ்ரோ சாதனைகள், பசுமைப் புரட்சி, இந்திய பாரம்பரிய அறிவியல், விண்வெளி பயணம், கரோனா தடுப்பூசி தொடா்பான ஆராய்ச்சிகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த அறிவியல் கண்காட்சியினை பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பாா்வையிட்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் சங்க ஒருங்கிணைப்பாளா் லெனின்பாரதி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT