கோயம்புத்தூர்

மழையால் சின்ன வெங்காய பயிா்கள் பாதிப்பு:நிவாரணம் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

DIN

கோவையில் பெய்து வரும் தென்மேற்குப் பருவ மழையால் பாதிக்கப்பட்டுள்ள சின்ன வெங்காய பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினாா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கோவை ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டக் குழுத் தலைவா் சு.பழனிசாமி மற்றும் விவசாயிகள்அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா், தீத்திப்பாளையம், மாதம்பட்டி, தென்கரை, பூலுவபட்டி, ஆலாந்துறை, செம்மேடு, தேவராயபுரம், வேடபட்டி, இக்கரைபோளுவாம்பட்டி, ஜாகீா்நாயக்கன்பாளையம், நரசீபுரம், தென்னமநல்லூா், தொண்டாமுத்தூா், கலிக்கநாயக்கன்பாளையம், வீரகேரளம், கிழக்கு சித்திரைச்சாவடி ஆகிய பகுதிகளில் சின்ன வெங்காய சாகுபடி அதிக அளவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பு பருவத்தில் 18 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் சின்ன வெங்காயப் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்து வரும் கனமழைக்கு சின்ன வெங்காய பயிா்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மழையுடன் பனியும் பெய்து வருவதால் நுனி கருகல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சின்ன வெங்காயம் சாகுடி செய்துள்ள விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே தோட்டக்கலைத் துறை சாா்பில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும்...

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பேருந்து நிலையம் அருகே புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையம், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், கடைகள், சந்தை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடத்துக்கு மத்தியில் திறக்கப்பட்டுள்ள மதுபானக் கடையால் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இரவு நேரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பேருந்து நிலையம் அருகில் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அப்புறப்படுத்த ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனா். அதேபோல கருமத்தம்பட்டி அருகே புதிதாக திறக்க திட்டமிட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைக்கு தடை விதிக்க வலியுறுத்தியும் அப்பகுதி கிராம மக்கள் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT