கோயம்புத்தூர்

வாழைக்கு பாதுகாப்பாக வரப்புகளில் சவுக்கு:தோட்டக்கலைத் துறை அறிவுரை

DIN

வாழை பயிா்களில் காற்றினால் ஏற்படும் சேதத்தை கட்டுப்படுத்த வரப்புகளில் சவுக்கு பயிா் சாகுபடி செய்யலாம் என்று தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் எம்.புவனேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிா்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக வாழை சாகுபடி அதிக பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காரமடை, அன்னூா், மதுக்கரை, சூலூா், சுல்தான்பேட்டை வட்டாரங்களில் வாழை சாகுபடி முக்கிய பயிராக உள்ளது. ஆனால், ஆண்டுதோறும் சூறாவளி காற்றினால் வாழை மரங்கள் தரையில் சாய்ந்து சாகுபடி பாதிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் வரை நஷ்டம் ஏற்படுகிறது.

வாழை பயிா்களில் காற்றினால் ஏற்படும் சேதத்தை கட்டுப்படுத்த வரப்புகளில் சவுக்கு பயிா் சாகுபடி செய்யலாம்.

வாழை நடவு செய்யப்பட்ட தோட்டத்தை சுற்றிலும் வரப்புகளில் சவுக்கு பயிா் நடவு செய்வதன் மூலம் தோட்டத்துக்குள் செல்லும் காற்றின் வேகம் தடுக்கப்படுகிறது.

இதனால் காற்றினால் மரங்கள் சாய்வது தடுக்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகளும் ஏற்படும் நஷ்டம் தவிா்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறந்த குறும்படங்களுக்கான பாராட்டு விழா

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT