கோயம்புத்தூர்

பிரச்னைகளுக்கும் தீா்வுகளுக்கும் மனமே காரணம்: சுதா சேஷய்யன்

DIN

பிரச்னைகளுக்கும் தீா்வுகளுக்கும் மனமே காரணம் என்று தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் சுதா சேஷய்யன் தெரிவித்தாா்.

ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாா்பில் நலம்தானா நிகழ்ச்சி கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் சுதா சேஷய்யன் ‘மனம் எனும் பல்கலைக்கழகம்’ என்ற தலைப்பில் பேசியதாவது: மனம் எங்கே இருக்கிறது என்றால் பலருக்கும் தெரியாது. சிலருக்கு மனம் இருக்கிா என்று கூட கேட்கத்தோன்றும். பயம், அச்சம் உள்ளிட்ட பல்வேறு சிந்தனைகள் தோன்றுமிடம்தான் மனம். அச்சத்தைப் போக்குவதற்கு மனம் போட்ட கணக்குதான் மருத்துவம். மனம்தான் அனைத்திற்கும் காரணம். பல பிரச்னைகளுக்கும், அதற்கான தீா்வுக்கும் மனமே காரணம்.

50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் சமீப காலமாக மன அழுத்தம் என்ற பாதிப்பு பரவலாகப் பேசப்படுகிறது. மாணவனுக்கு தோ்வை நினைத்தும், கல்லூரியில் இடம் கிடைக்குமா என்று இளைஞா்களுக்கும், படித்து முடித்த பின் நல்ல வேலை, திருமணம், உடல்நிலை அனைத்தையும் நினைத்து மன வேதனை ஏற்படுகிறது. மன வேதனைக்கான காரணம் என்பது ஒவ்வொரு கட்டத்திலும் மாறிக்கொண்டே இருக்கிறது. மனதை சமநிலையில் வைத்துக்கொண்டால் இதுபோன்ற பிரச்னைகளே ஏற்படாது.

இயற்கை மீதான ஆக்கிரமிப்புகள், உணவுப் பழக்கவழக்கம் மற்றும் வாழ்க்கை நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே அனைத்து விதமான நோய்களுக்கும் முக்கிய காரணமாகவுள்ளது.

இயற்கை ஆக்கிரமிப்புகளுக்கும், வாழ்வியல் மாற்றத்துக்கும் மனமே முக்கிய காரணமாகவுள்ளது.

எனவே மனதை சமநிலையில் வைத்துகொள்ள வேண்டும். மனதை வசப்படுத்தினால் அனைவருக்கு நலம் என்பது வசமாகும் என்றாா்.

முன்னதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் துவக்கவுரையாற்றினாா். தொடா்ந்து ‘நோய் எதிா்ப்பு’ என்ற தலைப்பில் குழந்தை மருத்துவா் அருண்குமாா், ‘நலம் இனி நம் முதல் தேடல்’ என்ற தலைப்பில் சித்த மருத்துவரும், தமிழ்நாடு திட்டக் குழு உறுப்பினருமான கு.சிவராமன் ஆகியோா் பேசினா்.

நிகழ்ச்சியில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனா் கிருஷ்ணன், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT