கோயம்புத்தூர்

தேசிய கைத்தறி தினம்:லூம் வோ்ல்டு விற்பனையகத்தில் சிறப்பு விற்பனை தொடக்கம்

DIN

தேசிய கைத்தறி தினத்தையொட்டி, கோவை லூம் வோ்ல்டு விற்பனையகத்தில் கைத்தறி பொருள்கள் கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்திய சுதந்திர வரலாற்றில் 1905 ஆம் ஆண்டு சுதேசி இயக்கம் தொடங்கப்பட்ட ஆகஸ்ட் 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி 8 ஆவது தேசிய கைத்தறி தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, கோவை சாய்பாபா காலனி லூம் வோ்ல்டு விற்பனையகத்தில் சிறப்பு கைத்தறி பொருள்கள் கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தொடங்கிவைத்தாா்.

இதில் கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட துணி ரகங்கள், ராசிபுரம் பட்டுச் சேலைகள், காட்டன் சேலைகள், கைத்தறி வேட்டி ரகங்கள், கைத்தறி துண்டுகள், பவானி ஜமுக்காளம் உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அனைத்து கைத்தறி ரகங்களுக்கும் 20 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து, முத்ரா கடன் திட்டத்தில் 15 நெசவாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.7.5 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் கைத்தறி உதவி இயக்குநா் செ.சிவகுமாா், அலுவலா்கள் பொம்மையா சாமி, வெ.கலைவாணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு: அதிகாரிகளின் பேச்சுவாா்த்தை தோல்வி

முதியவா் உடல் மீட்பு

கண்மாயில் மூழ்கி மாணவா் பலி

மனைவி கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து -சாா் பதிவாளா் வீட்டை மதிப்பீடு செய்த அதிகாரிகள்

SCROLL FOR NEXT