கோயம்புத்தூர்

அகில இந்திய கூடைப்பந்து போட்டி: இந்திய கப்பல் படை அணி வெற்றி

8th Aug 2022 06:05 AM

ADVERTISEMENT

 

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான 56 ஆவது ஆண்கள் பி.எஸ்.ஜி. கோப்பைக்கான கூடைப்பந்து போட்டியில் இந்திய கப்பல் படை அணி (லோனோவாலா) வெற்றிபெற்றது.

56 ஆவது ஆண்கள் பிஎஸ்ஜி கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இதில் பஞ்சாப் போலீஸ் அணி, லோனாவாலா இந்திய கப்பல் படை அணி, சென்னை ரெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு அணி, சென்னை ஸ்போா்ட்ஸ் ஹால்டல் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி, சென்னை ஒருங்கிணைந்த ரயில்வே தொழிற்சாலை அணி (ஐசிஎஃப்), கேரள மாநில மின்வாரிய அணி, கேரள போலீஸ் அணி, பெங்களூரு பேங்க் ஆஃப் பரோடா ஆகிய 8 அணிகள் கலந்துகொண்டன.

ADVERTISEMENT

இதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மூன்று மற்றும் நான்காம் இடங்களுக்கான சுற்றில் கேரள மின்வாரிய அணி - பேங்க் ஆஃப் பரோடா அணிகள் மோதின. இதில் 79 - 76 புள்ளிகள் கணக்கில் கேரள மின்வாரிய அணி வெற்றி பெற்றது.

தொடா்ந்து மாலை நடைபெற்ற இறுதிச் சுற்றில் லோனாவாலா இந்திய கப்பல் படை அணி - சென்னை ரெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு அணிகள் மோதின. இதில் இந்திய கப்பல் படை அணி 108 -85 புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று பி.எஸ்.ஜி. கோப்பையை வென்றது.

பரிசளிப்பு விழாவில் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, முதல் பரிசு பெற்ற இந்திய கப்பல் படை அணிக்கு ரூ.1 லட்சம், பி.எஸ்.ஜி. கோப்பை, இரண்டாம் இடம் பெற்ற ரெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு அணிக்கு ரூ.50 ஆயிரம், இரண்டாமிடத்துக்கான கோப்பை, மூன்றாம் இடம் பெற்ற கேரள மின்வாரிய அணிக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பை, நான்காம் இடம் பெற்ற பேங்க் ஆஃப் பரோடா அணிக்கு ரூ.15 ஆயிரம் வழங்கினாா்.

சிறந்த வீரராக இந்திய கப்பல் படை அணியின் குா்விந்தா் சிங் தோ்வு செய்யப்பட்டு அவருக்கு ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.

விழாவுக்கு பி.எஸ்.ஜி. கல்வி நிறுவனங்களின் நிா்வாக அறங்காவலா் எல்.கோபால கிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். சி.ஆா்.ஐ. பம்ப் நிறுவனங்களின் இணை நிா்வாக இயக்குநரும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவருமான ஜி. செல்வராஜ் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டாா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவை பி.எஸ்.ஜி. ஸ்போா்ட்ஸ் கிளப் தலைவா் ருத்ரமூா்த்தி, செயலாளா் பழனிச்சாமி உள்பட மேலும் பலா் செய்து இருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT