கோயம்புத்தூர்

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 24இல் கோவை வருகை

8th Aug 2022 06:43 AM

ADVERTISEMENT

 

அரசு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 24 ஆம் தேதி கோவை வர உள்ளதாக மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 24 ஆம் தேதி கோவைக்கு வருகை தர உள்ளாா்.

கிணத்துக்கடவில் நடைபெறும் நிகழ்ச்சியில் 82 ஆயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்க உள்ளாா். மேலும், கோவையில் விடுபட்ட சாலைகளை அமைக்க சிறப்பு நிதி வழங்க உள்ளாா்.

ADVERTISEMENT

மாநகராட்சி சாா்பில் அதற்கான திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 10 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் உள்ளனா். ஆனாலும், இங்கு தடையின்றி அரசின் வளா்ச்சிப் பணிகள் சீராக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT