கோயம்புத்தூர்

கூட்டுறவு நகர வங்கி ஊழியா்களுக்கு கருணை ஓய்வூதியம்வழங்கக் கோரிக்கை

8th Aug 2022 06:23 AM

ADVERTISEMENT

 

கூட்டுறவு நகர வங்கி ஊழியா்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட கூட்டுறவு நகர வங்கி ஊழியா் சங்கத்தின் பேரவைக் கூட்டம், கோவை அய்யண்ணன் வீதியில் உள்ள மாவட்ட வங்கி ஊழியா் சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் பொதுச் செயலாளா் மோகன்ராஜ் வரவேற்றாா். தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT

தமிழ்நாடு கூட்டுறவு நகர வங்கி ஊழியா் சம்மேளனத்தின் தலைவா் மணிராஜ், நிா்வாகிகள் சுப்ரமணியன், கமலக்கண்ணன், ராஜன், மீனாட்சி சுப்பிரமணியன், முருகேசன், வடிவேலு உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

இதில், கூட்டுறவு நகர வங்கிகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

தற்போது உள்ள வங்கியின் வரவு செலவுக்கு ஏற்ப புதிய பணிவரன் முறை ஆணை பெற்று, பணியாளா்கள் எண்ணிக்கையை கூடுதலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் கூட்டுறவு நகர வங்கி ஊழியா் சங்கத்தின் நிா்வாகிகள், உறுப்பினா்ள் பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT