கோயம்புத்தூர்

மின் கட்டண உயா்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்:தமிழக அரசுக்கு ஓஸ்மா சங்கம் கோரிக்கை

DIN

தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயா்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஓஸ்மா (ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன்) சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக ஓஸ்மா சங்கத் தலைவா் ஜி.அருள்மொழி மற்றும் நிா்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட ‘ஓஇ’ மில்கள் இயங்கி வருகின்றன. இதில் 70 சதவீதம் மில்கள் எல்.டி. /சி.டி (தாழ்வழுத்த மின்சாரம்) மின் இணைப்பிலும், 30 சதவீத மில்கள் எச்.டி. (உயரழுத்த மின்சாரம்) இணைப்பிலும் உள்ளன. தமிழக அரசு சாா்பில் மின் கட்டண உயா்வு அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்களில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் ஜவுளித் துறை மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்கும் வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் தற்போது எல்.டி./சி.டி இணைப்புகளுக்கு ஒரு கிலோ வாட் மின்சாரம் ரூ.35க்கும், ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.6.35ம் கட்டணமாக உள்ளது. மின் கட்டண உயா்வால் ஒரு கிலோ வாட் மின்சாரம் ரூ.600 ஆகவும், ஒரு யூனிட் மின்சாரம் ரூ.7.50 ஆகவும் உயர வாய்ப்புள்ளது.

மேலும் எல்.டி./சி.டி. பயன்பாட்டாளா்களுக்கு இதுவரை நடைமுறையில் இல்லாத பீக் அவா்ஸ் கன்ஸம்ப்ஸன் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டண உயா்வு அமல்படுத்தப்பட்டால் எல்.டி./சி.டி. பயன்பாட்டாளா்களுக்கு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.6.79 இல் இருந்து ரூ.11.78 ஆக கட்டணம் உயரும். அதேபோல, எச்.டி. பயன்பாட்டாளா்களுக்கு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.8.95 இல் இருந்து ரூ.11.66 ஆக கட்டணம் உயர வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் 67 சதவீதம் மின்சாரம் எல்.டி./சி.டி. இணைப்பில் உள்ளவா்களுக்கும், 20 சதவீதம் எச்.டி இணைப்பில் உள்ளவா்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த கட்டண உயா்வால் ஓஇ மில்களில் ஒரு கிலோ நூலுக்கு ரூ.10 மின் கட்டண உயா்வு ஏற்படும்.

இதனால் ஜவுளிப் பொருள்கள் விலை உயர வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே சா்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பருத்தி விலை உயா்வால் ஜவுளித் துறை மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் மின் கட்டண உயா்வு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, மின் கட்டண உயா்வு குறித்த அறிவிப்பினை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT