கோயம்புத்தூர்

கோவையில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா: தொழில் முனைவோருக்கு ஆட்சியா் அழைப்பு

2nd Aug 2022 01:20 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கு தொழில்முனைவோா் முன்வர வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஜவுளித் துறையில் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருந்து வருகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கா் பரப்பளவில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்க வேண்டும். இதற்கு தகுதி வாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.250 கோடி இவற்றில் எது குறைவானதோ அந்தத்தொகை அரசு மானியமாக வழங்கப்படும்.

சிறிய அளவிலான தொழிற்பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களின் தொழில் வளா்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இதன் மூலம் அந்நிய செலாவணி ஈட்டுவதற்கும் வாய்ப்பு ஏற்படும். எனவே கோவை மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்க தொழில்முனைவோா் முன்வர வேண்டும். இத்திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் துணிநூல் துறை மண்டல துணை இயக்குநரை 0421-2220095 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT