கோயம்புத்தூர்

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

2nd Aug 2022 01:23 AM

ADVERTISEMENT

கோவையில் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, மதுக்கரை சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ பூங்குழலி மாரியம்மன் கோயில். இதன் பூசாரி ஜெயராம், சனிக்கிழமை மாலை கோயிலை பூட்டிச் சென்றாா். பின்னா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கோயிலுக்கு வந்தபோது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து உள்ளே சென்று பாா்த்தபோது அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.3 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஜெயராம் அளித்த தகவலின்பேரில் கோயில் தலைவா் முருகானந்தம் போத்தனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் கோயிலுக்கு அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT