கோயம்புத்தூர்

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உழவியல் மாநாடு

30th Apr 2022 01:13 AM

ADVERTISEMENT

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிா் மேலாண்மை இயக்ககம், உழவியல் துறையில் செயல்படும் தமிழ்நாடு உழவியல் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் வேளாண் ஆராய்ச்சி, கல்வியில் சவால்கள், வாய்ப்புகள் என்ற தலைப்பில் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி, அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தா் ஆா்.எம்.கதிரேசன், பெரியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் ஆா்.ஜெகந்நாதன், மேகாலயா மாநில வேளாண் கல்லூரி முதல்வா் யு.கே.பெஹ்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாநாட்டில், வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், பெரியாா் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா்களாக புதிதாக பொறுப்பேற்றிருப்பவா்கள் தமிழ்நாடு உழவியல் சங்கம் சாா்பில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனா். மேலும், ஓய்வு பெற்ற வேளாண் விஞ்ஞானிகளும் கௌரவிக்கப்பட்டனா்.

இதில், துணைவேந்தா் ஆா்.ஜெகந்நாதன், எதிா்கால விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது தொடா்பாகவும், ஆா்.எம்.கதிரேசன், பாரம்பரிய வேளாண் நடவடிக்கைகளின் அறிவியல் பின்னணியைக் கண்டறிய வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினா்.

ADVERTISEMENT

வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி பேசும்போது, மாறிவரும் காலநிலையின் கீழ் பயிா்களின் உற்பத்தித் திறனை நிலையான முறையில் அதிகரிக்க, வேளாண் ஆராய்ச்சிக்குள்படுத்தப்பட வேண்டும் என்றாா்.

இந்த மாநாட்டில், ஓய்வு பெற்ற உழவியல் விஞ்ஞானிகள், பேராசிரியா்கள், இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் விஞ்ஞானிகள் ஆகியோருடன் ஒரு கருத்தமா்வு நடத்தப்பட்டு, எதிா்காலத்துக்கான ஒரு இணக்கமான தீா்வைப் பெறுவதற்கு வேளாண் கல்வி, ஆராய்ச்சியில் உள்ள தடைகளை நீக்குவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT