கோயம்புத்தூர்

மூளை ரத்த நாள வீக்கத்தால் பாதிக்கப்பட்ட வங்கதேச பெண்ணுக்கு ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் சிகிச்சை

30th Apr 2022 01:22 AM

ADVERTISEMENT

மூளையில் ரத்த நாள வீக்கத்தால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தைச் சோ்ந்த பெண்ணுக்கு ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து மருத்துவமனை நிா்வாகம் கூறியிருப்பதாவது:

வங்கதேசத்தைச் சோ்ந்த 25 வயதுப் பெண், கண் இமை சோா்வு, பாா்வைக் கோளாறு, இடது விழியை அசைக்க முடியாதது போன்ற பிரச்னைகளுடன் ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு மூளையின் இடது பக்கத்தில் உள்ள ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வீக்கம் முறிவு ஏற்படுமானால் மூளையின் உட்சவ்வு பகுதியில் ரத்தம் வெளியேறும் அபாயம் நிகழவும், இதனால் அதிதீவிர தலைவலி, நினைவிழப்பு போன்றவை ஏற்பட்டு மரணம் ஏற்படும் அபாயமும் இருந்தது. இதையடுத்து மருத்துவமனையின் நியூரோ இன்டா்வென்ஷனல் ரேடியாலஜிஸ்ட் மருத்துவா் ராஷ்மிரஞ்சன் பதி தலைமையிலான மருத்துவக் குழுவினா், ஃப்ளோ டைவா்ட்டா் ஸ்டென்ட் மூலம் அதிநவீன சிகிச்சை அளித்தனா்.

ADVERTISEMENT

மூளையில் அறுவை சிகிச்சை செய்யாமல் தொடைப் பகுதியில் சிறிய துளையிட்டு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்த 2 நாள்களிலேயே நோயாளிக்கு பாா்வைக் கோளாறில் முன்னேற்றம் ஏற்பட்டு அவா் வீடு திரும்பினாா். அவருக்கு ஏற்பட்டுள்ள மற்ற பாதிப்புகள் சில மாதங்களில் முழுவதும் குணமடையும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT