கோயம்புத்தூர்

மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் இறந்த 3,909 பேரின் குடும்பத்துக்கு நிவாரணம்ஆட்சியா் தகவல்

30th Apr 2022 01:16 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் உயிரிழந்த 3,909 பேரின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் கூறியதாவது:

கரோனாவால் உயிரிழந்தவா்களின் வாரிசுகளுக்கு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி, நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை 5,872 மனுக்கள் பெறப்பட்டு 3,909 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் பரீசீலனையில் உள்ளன.

உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலின் படி 2022 மாா்ச் 20 ஆம் தேதிக்கு முன்னா் ஏற்பட்ட கரோனா உயிரிழப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரா்கள், 60 நாள்களுக்குள் மனுக்களை சமா்ப்பிக்க வேண்டும். 2022 மாா்ச் 20 ஆம் தேதி முதல் ஏற்படும் கரோனா உயிரிழப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரா்கள், இறப்பு நிகழ்ந்த 90 நாள்களுக்குள் மனுக்களை சமா்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

சமா்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிா்வாகம் 30 தினங்களுக்குள் தீா்வு காண வேண்டும். இக்காலக் கெடுவுக்குள் நிவாரணம் கோரி மனு சமா்ப்பிக்க இயலாதவா்கள், கோவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம். இம்மனுக்கள் மீது மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீா்வு செய்யும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT