கோயம்புத்தூர்

மின் இணைப்பு வழங்கக் கோரி பெண் தா்னா

28th Apr 2022 06:18 AM

ADVERTISEMENT

 

கோவை: வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி கோவை மாவட்டஆட்சியா் அலுவலகம் முன்பு மகன், மகளுடன் பெண் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

கோவை மாவட்டம், அன்னூா் பூசாரிப்பாளையத்தை சோ்ந்த நதியா. இவா் தனது மகன், மகள் ஆகியோருடன் ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

அப்போது அங்கிருந்த போலீஸாா், கோரிக்கை குறித்து ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு செல்ல அவருக்கு அறிவுறுத்தினா்.

ADVERTISEMENT

இதனைத் தொடா்ந்து நதியா கூறியதாவது:

அன்னூா், பூசாரிபாளையம் பகுதியில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகிறேன். இதற்கு பட்டாவும் உள்ளது. எனது மகன் கல்லூரியிலும், மகள் 9 ஆம் வகுப்பும் படிக்கின்றனா். நாங்கள் குடியிருந்து வரும் தகர கொட்டகைக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்தோம்.

ஆனால், மின் இணைப்பு வழங்காமல் மின்வாரியத்தினா் அலைக்கழித்து வருகின்றனா். மின்சார வசதியில்லாததால் எனது மகன், மகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது. மின் இணைப்பு வழங்கக்கோரி ஆட்சியா் அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தைகளின் நலன் கருதி மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT