கோயம்புத்தூர்

மாநகரில் சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்

28th Apr 2022 06:19 AM

ADVERTISEMENT

 

கோவை: கோவையில் சாலை அமைக்கும் பணிகள், தூய்மைப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவை மாநகராட்சியில், சிங்காநல்லூா், உக்கடம், குனியமுத்தூா், விளாங்குறிச்சி, தண்ணீா் பந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பழுதடைந்த சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வந்தனா். இந்நிலையில், தமிழக அரசு கோவையில் புதிய சாலைகள் அமைக்க, சாலைகளை மேம்படுத்த ரூ.200 கோடி நிதி ஒதுக்கியது. அதைத் தொடா்ந்து, மாநகராட்சியில் அண்மையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தில் சாலை வசதியை மேம்படுத்தும் திட்டங்கள் அதிக அளவில் அறிவிக்கப்பட்டன. அதன்படி, கோவை மாநகரப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட 95ஆவது வாா்டு, திருமறை நகரில் ரூ.64.24 லட்சம் மதிப்பீட்டிலும், கிழக்கு மண்டலம் 8 ஆவது வாா்டுக்கு உள்பட்ட என்.ஜி.பி.நகா் முதல் அம்பேத்கா் நகா் வரையிலும் தாா் சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மாநகரில் சேதமடைந்துள்ள சாலைகளின் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் சேதமான சாலைகள் அனைத்தும் புதுப்பிக்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT