கோவையில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை மாலை இடியுடன் கூடிய மழை பெய்ததது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் சனிக்கிழமை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
அதன்படி கோவை மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் ஒரு சில இடங்களில் காற்றுடன், இடி, மின்னல் ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. தொடா்ந்து இரவு வரை பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது.
ADVERTISEMENT