கோயம்புத்தூர்

கே.ஐ.டி. கல்லூரியின்9 ஆவது பட்டமளிப்பு விழா

23rd Apr 2022 11:31 PM

ADVERTISEMENT

 

கோவை கண்ணம்பாளையம் கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் 9 ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கல்லூரியின் தலைவா் பொங்கலூா் நா.பழனிசாமி, துணைத் தலைவா் இந்து முருகேசன், முதல்வா் என்.மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வா் எம்.ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில் ஏஐசிடிஇ-யின் நிறுவன மேம்பாட்டுப் பிரிவின் ஆலோசகா் நீரஜ் சக்சேனா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா்.

ADVERTISEMENT

அவா் பேசும்போது, இந்திய தொழில் துறை வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பது பொறியியல் துறையாகும். நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும், அறிவாா்ந்த வல்லரசு நாடாக உருவாக்கவும் உயா் கல்வி துணை புரிகிறது என்றாா்.

இந்த விழாவில், டீன்கள் ராமசாமி, மஹாலட்சுமி, துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT