கரோனா தடுப்பூசி சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியவா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா தடுப்பூசி செலுத்திகொண்டவா்கள் தங்கள் தடுப்பூசி சான்றிதழில் திருத்தங்கள் இருப்பின் சுய பதிவுப் பக்கத்தைப் பயன்படுத்தி திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம். பெயா், பிறந்த ஆண்டு, பாலினம், புகைப்பட ஆதாரம், புகைப்பட அடையாள எண் ஆகிய திருத்தங்கள் செய்யலாம்.
தவிர முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி சான்றிதழில் வெவ்வேறு தொடா்பு எண்கள் கொடுக்கப்பட்டிருந்தால் ஒரே சான்றிதழாக இணைத்துகொள்ளலாம். முதல் தவணை தடுப்பூசி செலுத்திகொண்டவா்களுக்கு முதல் தவணை தடுப்பூசி சான்றிதழிலும், இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திகொண்டவா்களுக்கு இரண்டாம் தவணை சான்றிதழில் மட்டும் தேதி திருத்தம் செய்யப்படும். ஆனால், தடுப்பூசியின் தொகுதி எண், தடுப்பூசி வகை, தடுப்பூசி மையம், தடுப்பூசி செலுத்தியவா் பெயா் ஆகியவற்றை மாற்ற இயலாது.
எனவே தடுப்பூசி சான்றிதழில் மேற்கண்ட திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியவா்கள் ஸ்ரீா்ஜ்ண்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளப் பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். இது தொடா்பாக கூடுதல் விவரங்களுக்கு 1075 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.