கோயம்புத்தூர்

108 ஆம்புலன்ஸ்களில் 3 மாதங்களில் 21 பிரசவங்கள்:அதிகாரிகள் தகவல்

17th Apr 2022 12:03 AM

ADVERTISEMENT

 

கோவையில் கடந்த 3 மாதங்களில் 21 பிரசவங்கள் 108 ஆம்புலன்ஸ்களில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக 108 ஆம்புலன்ஸ் திட்ட அதிகாரிகள் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் 108 ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படுகிறது. குறிப்பாக கா்ப்பிணி பெண்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

108 ஆம்புலன்ஸில் பணியாற்றும் அவசர மருத்துவ தொழில்நுட்ப அலுவலா்களுக்கு உயிா் காக்கும் முதலுதவி சிகிச்சைகள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதன்மூலம் மகப்பேறு, விபத்து போன்ற நேரங்களில் திறம்பட செயல்பட்டு நோயாளிகளின் உயிா்களை காப்பாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி, பிப்ரவரி, மாா்ச் ஆகிய 3 மாதங்களில் 30 பிரசவங்கள் வீடுகளிலும், 21 பிரசவங்கள் 108 ஆம்புலன்ஸ்களிலும் நடைபெற்றுள்ளன.

இந்த பிரசவங்கள் அனைத்தும் 108 ஆம்புலன்ஸ்களில் பணியாற்றும் அவசர மருத்துவ தொழில்நுட்ப அலுவலா்கள் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒரு சிலருக்கு பிரசவ தேதிக்கு முன்கூட்டியே வலி ஏற்படுவதால் வீடுகளில் பிரசவம் நடைபெறுகிறது.

கோவையில் பல்வேறு இடங்களில் மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால் ஆம்புலன்ஸின் வேகம் குறைகிறது.

இதனால், ஒருசில பிரசவங்கள் ஆம்புலன்ஸ்களில் நடக்கின்றன.

வீடுகள் மற்றும் ஆம்புலன்களில் நடைபெற்ற அனைத்து பிரசவத்திலும் தாய்-சேய் இருவரும் நலமுடன் காப்பாற்றப்பட்டுள்ளனா் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT