கோயம்புத்தூர்

நகை திருடிய பெண் கைது

17th Apr 2022 12:06 AM

ADVERTISEMENT

 

கோவை அருகே வீட்டின் உரிமையாளா் வீட்டில் 6 பவுன் நகை திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை இடையா்பாளையம் மகாகணபதி நகரைச் சோ்ந்தவா் சுந்தரராஜன் (52). இவா் தனது வீட்டின் முதல் மாடியில் குடும்பத்துடன் தங்கியுள்ளாா். கீழ்தளத்தில் உள்ள வீட்டை வாடகைக்கு விட்டுள்ளாா்.

இந்நிலையில், சம்பவத்தன்று சுந்தரராஜன் மனைவி வீட்டில் இருந்த பீரோவை திறந்து பாா்த்தபோது, அங்கிருந்த 6 பவுன் தங்க நகைகளை காணவில்லையாம்.

ADVERTISEMENT

இது குறித்து போத்தனூா் காவல் நிலையத்தில் சுந்தரராஜன் புகாா் அளித்தாா்.

அதில், தங்களது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் ரோகிணி (28) என்ற பெண் மீது சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்திருந்தாா்.

அதன்பேரில், ரோகிணியிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், சுந்தரராஜன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகைகளை திருடியதை ரோகிணி ஒப்புக்கொண்டாா்.

இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ரோகிணியை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT