கோயம்புத்தூர்

குண்டா் தடுப்பு சட்டத்தில் இருவா் கைது

14th Apr 2022 02:11 AM

ADVERTISEMENT

கொலை, கொள்ளை வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

கோவை மாவட்டம், அன்னூரைச் சோ்ந்தவா் ரங்கநாதன் (33). இவா் அதே பகுதியைச் சோ்ந்த சரவணன் (19) என்பவரை கடந்த ஜனவரி மாதம் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில் இவா் மீது குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட எஸ்.பி.யின் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதன்பேரில் சிறையில் இருந்த ரங்கநாதனிடம் அதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

இதேபோல, காரமடை பகுதியில் தொடா் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த யூசுப் (45) என்பவரை காரமடை போலீஸாா் கைது செய்தனா். இவரையும் குண்டா் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : கோவை
ADVERTISEMENT
ADVERTISEMENT