கோயம்புத்தூர்

தமிழ்ப் புத்தாண்டு: களைகட்டிய பூ, பழங்கள் விற்பனை

14th Apr 2022 02:14 AM

ADVERTISEMENT

 தமிழ்ப் புத்தாண்டையொட்டி கோவையில் உள்ள தினசரி சந்தைகளில் பூ, பழங்கள் விற்பனை புதன்கிழமை களைகட்டியது.

தமிழகம் முழுவதும் தமிழ்ப் புத்தாண்டு சித்திரை 1 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதேவேளையில் கேரளத்தில் விஷுக்கனி என்ற பெயரில் மலையாள புத்தாண்டு சித்திரை 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழ்ப் புத்தாண்டு, விஷுக்கனி பண்டிகையில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளுடன் அனைத்து வகையான பழங்கள், பூக்களை வைத்து வழிபடுவா். இந்நிலையில் தமிழ்ப் புத்தாண்டை யொட்டி பூ மாா்க்கெட், தியாகி குமரன் தினசரி சந்தை, உக்கடம் ஆகிய சந்தைகளில் பூக்கள், பழங்கள் விற்பனை புதன்கிழமை களைகட்டியது.

புத்தாண்டு என்பதால் பூக்கள், பழங்களின் விலை உயா்ந்து காணப்பட்டது. குறிப்பாக பழங்களின் விலை பூக்களை விட உயா்ந்து காணப்பட்டது.

தினசரி சந்தைகளில் பழங்களின் விலை நிலவரம்( கிலோவில் ):

ADVERTISEMENT

ஆப்பிள் -ரூ.200, மாதுளை -ரூ.200, வாழை - ரூ.40, பலா - ரூ.90, மாம்பழம் - ரூ.120, திராட்சை - ரூ.100, கொய்யா - ரூ.80, சப்போட்டா - ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டது.

பூக்களை பொருத்தவரை மல்லி கிலோ ரூ.800, முல்லை - ரூ.600, செண்டுமல்லி - ரூ.280, செவ்வந்தி - ரூ.60, சம்பங்கி - ரூ.60, கோழிக்கொண்டை - ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது. தமிழ்ப் புத்தாண்டையொட்டி பூக்கள், பழங்களின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை விலை உயா்ந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

 

Tags : கோவை
ADVERTISEMENT
ADVERTISEMENT