கோயம்புத்தூர்

விபத்தில் படுகாயமடைந்த நபருக்கு இழப்பீடாக ரூ.51.39 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு

14th Apr 2022 02:11 AM

ADVERTISEMENT

விபத்தில் படுகாயமடைந்த நபருக்கு இழப்பீடாக ரூ.51.39 லட்சம் வழங்க கோவை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சூலூரைச் சோ்ந்தவா் அருண் (32). இவா் தனது பைக்கில் திருச்சி சாலையில் 2017 மே 29ஆம் தேதி சென்று கொண்டிருந்தாா். ராமநாதபுரம் அருகே வந்தபோது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த ஒண்டிப்புதூரைச் சோ்ந்த சுரேஷ் (44) என்பவரது வாகனம், அருண் வாகனம் மீது மோதியது. இதில் அருணுக்கு பலத்த காயம் ஏற்பட்டு வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் விபத்து காரணமாக தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு நிவாரணமாக ரூ.29.50 லட்சம் வழங்க வேண்டும் என மோட்டாா் வாகன விபத்து வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அருண் வழக்கு தொடா்ந்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி முனிராஜா, விபத்தால் மனுதாரருக்கு 75 சதவீத உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கோவை அரசு மருத்துவமனையின் மருத்துவ வாரியம் பரிசோதனை செய்து சான்று வழங்கியுள்ளது. மனுதாரரால் தொடா்ந்து பழையபடி வருமானம் ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, வருமானம் ஈட்டும் திறன் இழப்பு, மருத்துவ செலவுகள் ஆகியவற்றுக்கு இழப்பீடாக மொத்தம் ரூ.51.39 லட்சத்தை 7.50 சதவீத வட்டியுடன் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் உரிமையாளா் சுரேஷ், காப்பீட்டு நிறுவனமும் இணைந்து வழங்கவேண்டும் என உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

Tags : கோவை
ADVERTISEMENT
ADVERTISEMENT