கோயம்புத்தூர்

ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

14th Apr 2022 02:12 AM

ADVERTISEMENT

சம்பள நிலுவையை வழங்கக்கோரி கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை மாநகராட்சி 98 ஆவது வாா்டு குறிச்சி பகுதியில் பணிபுரியும் 40க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் தங்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி, தெற்கு மண்டலம் 98 ஆவது வாா்டு அலுவலகம் முன்பு திடீரென பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் அவா்களிடம் சம்பளம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததைத் தொடா்ந்து அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கராவிடம் தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கா் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப் பணியாளா் சங்கத்தின் செயலாளா் தமிழ்நாடு செல்வம் மனு அளித்தாா்.

 

Tags : கோவை
ADVERTISEMENT
ADVERTISEMENT