கோயம்புத்தூர்

சாதாரண மக்கள் மீது மத்திய அரசு பொருளாதார சுமையை சுமத்தி வருகிறது: காா்த்தி சிதம்பரம் எம்.பி.

14th Apr 2022 02:12 AM

ADVERTISEMENT

சாதாரண மக்கள் மீது மத்திய அரசு பொருளாதார சுமையை சுமத்தி வருகிறது என்று காா்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினாா்.

கோவை வந்த சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், விமான நிலையத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்தியில் ஆளும் பாஜக இஸ்லாமியா்களை ஒடுக்க வேண்டும் என்பதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகின்றனா். பெட்ரோல், டீசல் விலை உயா்ந்தால் அனைத்து பொருள்களின் விலையும் உயரும். மத்திய அரசு சாதாரண மக்கள் மீது பொருளாதார சுமையை சுமத்தி வருகிறது. பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்காமல் விலைவாசி குறையாது என்றாா்.

முன்னதாக தன்னை சந்தித்த திருநங்கைகள் நலசங்கத் தலைவா் வைஷ்ணவி மற்றும் நிா்வாகிகளிடம், கூத்தாண்டவா் கோயில் திருவிழாவுக்காக நன்கொடையாக ரூ.10 ஆயிரத்தை காா்த்தி சிதம்பரம் வழங்கினாா்.

ADVERTISEMENT

முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கந்தசாமி, இளைஞா் காங்கிரஸ் செய்தி தொடா்பாளா் ஹரிஹரசுதன், அவிநாசி வெங்கடாசலம், பாா்த்திபன், ஜொ்ரி லூயிஸ், வடவள்ளி பாலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

Tags : கோவை
ADVERTISEMENT
ADVERTISEMENT