வால்பாறையில் வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள கடைக்கு இந்து அறநிலைத் துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
இந்து அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமாக 17 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில் சில கடை உரிமையாளா்கள் வேறு நபா்களுக்கு உள்வாடகைக்கு விட்டுள்ளது தெரியவந்து கடந்த சில மாதங்களுக்கு முன் அதிகாரிகள் நேரில் வந்து வாடகை வசூல் செய்வதில் தீவிரம் காட்டி வந்தனா்.
இந்நிலையில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வாடகை பாக்கி வைத்திருந்த
சந்திரன் என்பவரின் கடைக்கு இந்து அறநிலையத் துறை உதவி ஆணையா் விஜயலட்சுமி தலைமையில் செயல் அலுவலா்அசோக்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா்.