கோயம்புத்தூர்

கோவையில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து: பச்சிளம் குழந்தை, ஓட்டுநர் பலி

12th Apr 2022 02:39 PM

ADVERTISEMENT

கோவை மலுமிச்சம்பட்டி அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் சிகிச்சைக்காக வந்த பச்சிளம் குழந்தை மற்றும் ஒட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டியில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு பிறந்த குழந்தையுடன் வந்த ஆம்புலன்ஸ், கோவை மலுமிச்சம்பட்டி அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

இதில், பச்சிளம் குழந்தை மற்றும் ஆம்புலன்ஸை ஓட்டி வந்த ஓட்டுநர் ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ADVERTISEMENT

இந்த விபத்து குறித்து மதுக்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT