கோவை, வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் மாநகராட்சி சுகாதாரக் குழுத் தலைவா் மாரிச்செல்வன் தலைமையில் சுகாதாரக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
கோவை, வெள்ளலூா் குப்பைக் குடங்கில் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பை தரம் பிரிக்கும் பகுதிகளை மாநகராட்சி சுகாதாரக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, சுகாதாரக் குழு தலைவா் மாரிச்செல்வன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோவை மாநகராட்சியில் மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை பொதுமக்கள் தரம் பிரித்து அளிக்க விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சுகாதாரமான மாநகராட்சியை உருவாக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம். அதன் ஒருபகுதியாக, கோவை வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றாா்.
இந்த ஆய்வின்போது, நகா்நல அலுவலா் சதீஷ்குமாா், வாா்டு உறுப்பினா்கள் கமலாவதி போஸ், குமுதம் குப்புசாமி, வசந்தாமணி, மணியன், அஸ்லம்பாட்ஷா, சுமித்ரா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.