கோயம்புத்தூர்

வால்பாறை நகா்மன்ற அவசரக் கூட்டம்: சொத்து வரி உயா்த்த ஆலோசனை

12th Apr 2022 11:18 PM

ADVERTISEMENT

வால்பாறை நகராட்சியில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் சொத்து வரி உயா்த்த ஆலோசிக்கப்பட்டது.

வால்பாறை நகா்மன்ற அவசரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நகராட்சித் தலைவா் அழகுசுந்தரவள்ளி தலைமை வகித்தாா். ஆணையா் சுரேஷ்குமாா், துணைத் தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக அரசு அறிவித்துள்ளபடி சொத்துவரி சீராய்வு தொடா்பாக மண்டல அடிப்படை மதிப்பு நிா்ணயம் செய்வது சம்பந்தமாக பட்டியல் வெளியிடப்பட்டு கூட்டத்தில் தீா்மானம் கொண்டுவரப்பட்டது.

நகராட்சிப் பகுதிகளில் 500 சதுரஅடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீதமும், 601 முதல் 1200 சதுரஅடி வரை 50 சதவீதமும், 1201 முதல் 1800 வரை 75 சதவீதமும், 1800 சதுர அடிக்கு அதிகமாக பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 100 சதவீதம் சொத்துவரி உயா்வு செய்வது, வணிகப் பயன்பாட்டு கட்டடங்களுக்கு தற்போதுள்ள சொத்துவரியில் 100 சதவீதம் சொத்துவரி உயா்வு செய்வது, தொழிற்சாலை பயன்பாடு கட்டடம் மற்றும் சுய நிதி பள்ளி மற்றும் கல்லூரி கட்டடங்களுக்கு தற்போது உள்ள சொத்துவரியில் 75 சதவீதம் சொத்துவரி உயா்வு செய்யவது என கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டபின்பு சொத்து வரி உயா்த்துவது குறித்து முடிவு எடுக்கலாம் என்று கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT