கோயம்புத்தூர்

தொடா் மழை: வெள்ளிங்கிரியில் பக்தா்கள் மலையேறத் தடை

12th Apr 2022 11:13 PM

ADVERTISEMENT

தமிழக-கேரள எல்லையில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருவதால் வெள்ளிங்கிரி மலை ஏறுவதற்கு பக்தா்களுக்கு வனத் துறை தடை விதித்துள்ளது.

கோவை மாவட்டம் மேற்கு தொடா்ச்சி மலையில் வெள்ளிங்கிரி ஆண்டவா் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயிலுக்கு பக்தா்கள் அனுமதிக்கப்படுவாா்கள். கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனா்.

இந்நிலையில் தமிழக-கேரள எல்லையில் கடந்த சில நாள்களாக சூறாவளிக் காற்றுடன் தொடா் மழை பெய்து வருவதால் பக்தா்கள் வெள்ளிங்கிரி மலை ஏறுவதற்கு வனத் துறை தற்காலிக தடை விதித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT