கோயம்புத்தூர்

கோவை வழித்தடத்தில் கோடைக் கால சிறப்பு ரயில்கள்

12th Apr 2022 11:15 PM

ADVERTISEMENT

கோடைக் காலத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக கோவை வழித்தடத்தில் தாம்பரம் - எா்ணாகுளம், சென்னை - திருவனந்தபுரம், மைசூரு - திருவனந்தபுரம், கோவையில் இருந்து கண்ணூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் - எா்ணாகுளம் சிறப்பு ரயில்:

ஏப்ரல் 22ஆம் தேதி முதல் ஜூன் 24 ஆம் தேதி வரை வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06019) மறுநாள் காலை 5 மணிக்கு எா்ணாகுளத்தை சென்றடையும்.

இதேபோல, எா்ணாகுளத்தில் இருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.55 மணிக்குப் புறப்படும் விரைவு ரயில் (எண்: 06020) மறுநாள் நண்பகல் 12.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயிலானது, ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், எழும்பூா் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சென்னை - திருவனந்தபுரம் விரைவு ரயில்:

ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் மாலை 4 மணிக்குப் புறப்படும் வாராந்திர விரைவு சிறப்பு ரயில் (எண்: 22207) மறுநாள் காலை 7.05 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும். இதேபோல, ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் திருவனந்தபுரத்தில் இருந்து புதன்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.15 மணிக்குப் புறப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 22208) மறுநாள் காலை 10.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும். இந்த ரயிலானது, காட்பாடி, சேலம், ஈரோடு, கோவை, பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், ஆலப்புழா, கொல்லம் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைசூரு - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்:

ஏப்ரல் 13 ஆம் தேதி மைசூருவில் இருந்து பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06249), மறுநாள் காலை 8.10 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும். இதேபோல, ஏப்ரல் 17 ஆம் தேதி, திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 4.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06250) மறுநாள் 3.30 மணிக்கு மைசூரு சென்றடையும்.

இந்த ரயிலானது, மாண்டியா, பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, திருச்சூா், ஆலுவா, எா்ணாகுளம், சோ்தாலா, ஆலப்புழா, அம்பலப்புழா, காயன்குளம், கொல்லம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை - கண்ணூா் சிறப்பு ரயில்:

மே 1 ஆம் தேதி முதல் கோவை - கண்ணூா் இடையே முன்பதிவில்லாத விரைவு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, பாலக்காடு கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை - கண்ணூா் சிறப்பு ரயில் (எண்: 16608) கண்ணூா் - கோவை சிறப்பு ரயில் (எண்:16607) மே 1ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலானது, கோழிக்கோடு, ஷொரனூா், பாலக்காடு நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT