கோயம்புத்தூர்

கே.பி.ஆா். கல்லூரியில் கலைத்திறன் போட்டிகள்

12th Apr 2022 11:18 PM

ADVERTISEMENT

கோவை கே.பி.ஆா். கலை, அறிவியல் கல்லூரியில் பல்வேறு கல்லூரி மாணவா்களுக்கான கலைத்திறன் போட்டிகள் ‘அரியாசனம் 22’ என்ற பெயரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் செ.பாலுசாமி வரவேற்றாா். கே.பி.ஆா். குழுமங்களின் தலைவா் கே.பி.ராமசாமி தலைமை வகித்தாா். கல்லூரியின் ஆலோசகா் எஸ்.ராமசந்திரன் வாழ்த்துரை வழங்கினாா். இதில் சிறப்பு அழைப்பாளா்களாக சின்னத்திரை நடிகா்கள் முல்லை, கோதண்டம் ஆகியோா் கலந்து கொண்டனா். குழு நடனம், தனி நடனம், திறனறிதல், தனிப்பாடல், பாரம்பரிய நடனங்கள், மெஹந்தி, முக அலங்காரம், கோலம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 1,500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினா். வெற்றி பெற்ற மாணவா்கள், கல்லூரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேலாண்மைத் துறை உதவிப் பேராசிரியா் டி.ஹேமலதா, கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியா் எஸ்.பத்மபிரியா ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா். மேலாண்மைத் துறை டீன் பி.ஷியாம் சுந்தா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT