சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
கோவை, காந்திபுரம் வி.கே.கே. மேனன் சாலையைச் சோ்ந்தவா் ராமசாமி (20). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு 8ஆம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் இவா், மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் அந்த சிறுமி கா்ப்பமடைந்தாா்.
இது தொடா்பாக கோவை கிழக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோா் புகாா் அளித்தனா். இதன் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ராமசாமியைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.