கோயம்புத்தூர்

எஸ்டேட் பகுதிகளில் மின் வேலி அமைக்க கோரிக்கை

9th Apr 2022 05:43 AM

ADVERTISEMENT

வால்பாறை எஸ்டேட் பகுதிகளுக்கு வன விலங்குகள் வருவதைத் தடுக்க வன எல்லைகளில் மின் வேலி அமைக்க வேண்டும் என்று சிஐடியூ தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளா் பரமசிவம், தமிழக அரசுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: வால்பாறை எஸ்டேட்டுகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

சமீப காலமாக தேயிலைத் தோட்டங்களில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், தோட்டத் தொழிலாளா்கள் அச்சத்துடன் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, எஸ்டேட் ஒட்டியுள்ள வன எல்லைகளில் மின் வேலி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT