கோயம்புத்தூர்

மாற்றுப் பணி வழங்கக் கோரி கரோனா தடுப்பூசி செவிலியா்கள் மனு

9th Apr 2022 05:42 AM

ADVERTISEMENT

கரோனா தடுப்பூசி செலுத்தும் செவிலியா்கள் மாற்றுப் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்ட ஆரம்ப மற்றும் நகா்ப்புற சுகாதார நிலையங்களில் கடந்த 6 மாதங்களாக நாங்கள் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடும் செவிலியா்களாகப் பணியாற்றி வந்தோம். எங்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வழங்காமல், மருந்து வழங்குதல், நோயாளிகளின் விவரங்களைப் பதிவு செய்தல், பொதுவான ஊசி செலுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தி வந்தனா்.

இந்நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் எங்களை கடந்த 31 ஆம் தேதி முதல் பணி நீக்கம் செய்துவிட்டனா்.

கரோனா கால கட்டங்களில் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வந்தோம்.

ADVERTISEMENT

தற்போது, வேலை இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கு மாற்றுப் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 2 மாதம் நிலுவையில் உள்ள சம்பளத்தை விரைந்து வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : கோவை
ADVERTISEMENT
ADVERTISEMENT