கோயம்புத்தூர்

வாடகை செலுத்தாத 15 கடைகளுக்கு பூட்டு: மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை

30th Sep 2021 06:30 AM

ADVERTISEMENT

கோவை மாநகராட்சியில் 7 ஆண்டுகளாக வாடகை செலுத்தாத 15 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை பூட்டு போட்டனா்.

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட தொட்டராயன் கோயில் வீதி, மாநகராட்சி வணிக வளாகத்தில் 63 கடைகள் உள்ளன. இதில் சில கடைகள் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக மாநகராட்சிக்கு மாத வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தனா்.

இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கராவின் உத்தரவுப்படி, உதவி ஆணையா் (வருவாய்) செந்தில்குமாா் ரத்தினம் தலைமையில், உதவி வருவாய் அலுவலா் செந்தில்குமாா், சிறப்பு வரி ஆய்வாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் வாடகை செலுத்தாமல் இருந்த 15 கடைகளை பூட்டி நடவடிக்கை மேற்கொண்டனா்.

இந்த 15 கடைகளுக்கும் ரூ.17.03 லட்சம் வாடகை நிலுவை தொகை உள்ளது. இந்த நிலுவை தொகையினை உடனடியாக செலுத்தும் பட்சத்தில் கடைகள் திறந்து விடப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT