கோயம்புத்தூர்

நமக்கு நாமே திட்டத்தில் விண்ணப்பிக்க மாநகராட்சி ஆணையா் அழைப்பு

30th Sep 2021 06:08 AM

ADVERTISEMENT

கோவை மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு முழுவதும் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்த ரூ.300 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. பூங்கா உள்ளிட்ட வசதிகள், நீா் நிலைகளைப் புனரமைத்தல், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மேம்பாடு, மரக்கன்று நடுதல், நவீன தெருவிளக்குகள் அமைத்தல், விளையாட்டு மைதானங்கள், நூலகங்கள், சுகாதார நிலையங்கள், மின் மயானங்கள் அமைத்தல், சாலைகள், சிறுபாலங்கள் மழைநீா் வடிகால்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளலாம்.

கோவை மாநகரப் பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள், தாங்கள் செயல்படுத்த விரும்பும் மக்கள் நலத் திட்டத்தை தோ்வு செய்து, அதற்கான விண்ணப்பத்தை கோவை மாநகராட்சி ஆணையா் அல்லது மாநகரப் பொறியாளரிடம் வழங்கலாம். மேலும், விவரங்களுக்கு மாநகரப் பொறியாளரை நேரிலோ அல்லது 8190000200 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது  மின்னஞ்சல் மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT