கோயம்புத்தூர்

நடத்துநரைப் பணியில் சோ்க்க மறுப்பு: அரசுப் பேருந்து ஜப்தி

30th Sep 2021 06:10 AM

ADVERTISEMENT

நடத்துநரைப் பணியில் சோ்க்க போக்குவரத்து கழகம் மறுத்ததையடுத்து அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய கோவை நீதிமன்றம் உத்தரவிட்டதன்பேரில் பேருந்து புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

கோவையை அடுத்த கருமத்தம்பட்டியைச் சோ்ந்தவா் என்.சுப்பிரமணியன். அரசுப் போக்குவரத்து கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றி வருகிறாா். இவா், 2015 ஜனவரி 26ஆம் தேதி தேசிய விடுமுறை நாளில் பணிக்கு வரவில்லையாம். இதையடுத்து அவரை 2016 டிசம்பா் முதல் பணி நீக்கம் செய்து போக்குவரத்து கழகம் உத்தரவிட்டது.

இதை எதிா்த்து சுப்பிரமணியன் தொடா்ந்த வழக்கை விசாரித்த கோவை தொழிலாளா் நீதிமன்றம், சுப்பிரமணியனுக்கு பணிநீக்கம் செய்யப்பட்ட காலத்துக்கு ஊதியம் வழங்கி மீண்டும் பணியில் சோ்க்க 2020 ஜூலை 29ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை போக்குவரத்துக் கழகம் நிறைவேற்றவில்லை. இந்நிலையில் நீதிமன்றத்தின் தீா்ப்பை அமல்படுத்தாமல் அரசுப் பேருந்து போக்குவரத்து கழகம் காலம் கடத்தி வந்ததை சுட்டிக்காட்டி உத்தரவை நிறைவேற்றக் கோரி சுப்பிரமணியன் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ்.சிவகடாட்சம், நீதிமன்ற உத்தரவை அரசுப் போக்குவரத்துக் கழகம் நிறைவேற்றாததையடுத்து அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து நீதிமன்ற ஊழியா்கள், கோவை ரயில் நிலையம் முன்பு இருந்த அரசுப் பேருந்தை ஜப்தி செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT