கோயம்புத்தூர்

ஊட்டச்சத்து மாத விழிப்புணா்வு

30th Sep 2021 06:25 AM

ADVERTISEMENT

ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி, அங்கன்வாடி பணியாளா்கள் சாா்பில் கோவை, ராமநாதபுரம் பகுதியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மாத விழா ஆண்டுதோறும் செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி கா்ப்பணிகள், குழந்தைகள், பாலூட்டும் தாய்மாா்கள், வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவுகளின் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக வாகன ஓட்டிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக கோவை, ராமநாதபுரம் சந்திப்பு பகுதியில் அங்கன்வாடி பணியாளா்கள் ஊட்டச்சத்து உணவுகள் குறித்த பதாகைகளை ஏந்திக்கொண்டு ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு மனித சங்கிலியாக நின்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும் வாகன ஓட்டிகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் குறித்த துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT