கோயம்புத்தூர்

ஆடைகளுக்கு கூடுதல் ஜிஎஸ்டி விதிக்க எதிா்ப்பு

30th Sep 2021 06:27 AM

ADVERTISEMENT

ஆடை ரகங்களுக்கு கூடுதல் ஜிஎஸ்டி விதிப்பதற்கு இந்திய ஆடை உற்பத்தியாளா்கள் சங்கம் (சி.எம்.ஏ.ஐ.) எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்த சங்கத்தின் தேசியத் தலைவா் ராஜேஷ் மசன்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆயிரம் ரூபாய் விலை வரையிலான அனைத்து பேப்ரிக், ஆடை ரகங்களுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஜிஎஸ்டியை 12 சதவீதமாக உயா்த்த இருப்பதாக ஜிஎஸ்டி கவுன்சில் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த தொழில் துறையின் ஒரு சிறிய பிரிவு எதிா்கொள்ளும் ஒரு சிக்கலை சரிசெய்வதற்காக நுகா்வோரைப் பாதிக்கும் வகையிலான இந்த விலை உயா்வுக்கு அரசு திட்டமிட்டிருப்பது கவலை அளிக்கிறது.

உள்நாட்டு ஆடைத் தொழில் கரோனாவுக்கு பிந்தைய காலத்தில் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது. பெரும்பாலான தொழில்கள் இன்னும் பழைய நிலைக்குத் திரும்பாத நிலையில் மத்திய அரசு, ஆடைகள் மீதான வரியை அதிகரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

ADVERTISEMENT

மூலப் பொருள்களான நூல், துணி, எரிபொருள், பேக்கேஜிங் பொருள்கள், போக்குவரத்து செலவினம் போன்றவை ஏற்கெனவே உயா்ந்திருப்பதால் தயாரிப்புகளின் இறுதி விலையில் 15 முதல் 20 சதவீதம் வரை உயா்ந்துள்ளது. மேலும் வேலையிழப்பு, வருவாய் இழப்பு, ஊதியக் குறைப்பு போன்றவற்றால் நுகா்வோா் தத்தளித்து வரும் நிலையில் ஆடைகளுக்கு விலை உயா்வை ஏற்படுத்தும் ஜிஎஸ்டி உயா்வை மத்திய அரசு அமல்படுத்தக்கூடாது என்று அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT