கோயம்புத்தூர்

பாறைகுழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு: கடையடைப்பு, காத்திருப்புப் போராட்டம்

DIN

அவிநாசி: அவிநாசி அருகே அம்மாபாளையம் கணபதி நகர் பகுதி பாறைகுழியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திங்கள்கிழமை கடையடைப்பு செய்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், திருமுருகன் பூண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட அம்மாபாளையம் 11வது வார்டு கணபதி நகர், கானக்காடு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மற்றும் விவசாயிகள் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் இப்பகுதியில் உள்ள பாறைகுழியில், திருப்பூர் மாநகராட்சி சார்பில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் லாரிகள் மூலமாக கொண்டு வந்து கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி, நோய்த் தொற்று அபாயம் ஏற்படும். மேலும் நிலத்தடி நீர் மாசுபடும் எனக் குறி பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை நிறுத்தம் வேண்டும் என கோரி துறை நிர்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், ஆத்திமடைந்த பொதுமக்கள், அம்மாபாளையம் பகுதியில் கடையடைப்பு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். 

இதையறிந்த திருமுருகன்பூண்டி காவலர்கள் முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இருப்பினும் திங்கள்கிழமை காலை கடைகள் அடைக்கப்பட்டு, பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் பொதுமக்களை தடுத்து நிறுத்தி, இரு நாள்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதை ஏற்க மறுத்த பொதுமக்கள் அருகிலுள்ள மாகாளியம்மன் கோயிலில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு மீண்டும் காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, போராட்டக் குழுவினர் காதிருப்புப் போராட்டத்தை கைவிட்டு, மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பதாக முடிவு செய்து கலைந்து சென்றனர். இதனால் அம்மாபாளையம் பகுதியில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கடைகள் அடைக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதினைப் பெற்ற முதல் அனிமேஷன் ஸ்டூடியோ!

அமலாக்கத் துறையின் இனிப்புக் குற்றச்சாட்டை மறுக்கும் கேஜரிவால்

வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT