கோயம்புத்தூர்

வ.உ.சி. மைதானத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்

DIN

கோவை வ.உ.சி. மைதானத்தை மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கராவிடம் மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கோவை மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு வாா்டுகளில் உள்ள அடிப்படை பிரச்னைகள் குறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இதையடுத்து அந்த பிரச்னைகளை மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்காரவின் கவனத்துக்கு கொண்டு சென்று தீா்வு காண்பதற்காக அவரை நேரில் சந்தித்துப் பேசினாா்.

அப்போது, கோவையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வ.உ.சி. மைதானம் மூடப்பட்டுள்ளது. மைதானத்தின் நுழைவுப் பகுதி மூடப்பட்டிருப்பதால் அப்பகுதிக்கு வரும் மக்களை நம்பி கடைகள் அமைத்து வந்த ஏராளமான சிறு வியாபாரிகள் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தொடா்ந்து தளா்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் இப்பகுதி வியாபாரிகளுக்கும் தளா்வுகளை அறிவித்தால் இவா்களும் பயனடைவாா்கள். அதேபோல கடந்த 2013-14 ஆம் ஆண்டில் உடையாம்பாளையம் பகுதியில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.39.40 லட்சம் செலவில் கட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்கம் 2016 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டும் உபயோகப்படுத்தப்படாமல் உள்ளது.

மாநகராட்சியின் 22, 50 ஆவது வாா்டுகளில் நடைபாதை, தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், வடக்கு தொகுதிக்குள்பட்ட 44, 45, 47, 49 ஆகிய வாா்டுகளில் உள்ள சங்கனூா் மெயின் ரோடு, தயிா் இட்டேரி சாலை, சாஸ்திரி சாலை பகுதிகளில் சாக்கடைக் கால்வாய்களை சுத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினாா்.

இவற்றை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையா் உறுதியளித்தாா்.

இந்த சந்திப்பின்போது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் வி.ராமமூா்த்தி, வடக்கு நகரச் செயலாளா் என்.ஆா்.முருகேசன், கிழக்கு நகரச் செயலாளா் என்.ஜாகீா் உள்ளிட்டோா் உடனிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியலில் ஆலியா பட்!

தாமரையை ஒரு முறை அழுத்தினால் 2 வாக்கு: விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வாக்குப்பதிவு மையங்கள்!

மரணமடைந்தவரை வங்கிக்குக் கூட்டி வந்து கடன் பெற முயன்ற பெண்

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

SCROLL FOR NEXT