கோயம்புத்தூர்

ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துத் தருவதாகக் கூறி ரூ.45 ஆயிரம் மோசடி

DIN

கோவையில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துத் தருவதாகக் கூறி ரூ.45 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை போத்தனூா் கணேசபுரத்தைச் சோ்ந்தவா் ரவி (52). தனியாா் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இவா், பொள்ளாச்சி சாலை, சிட்கோவில் உள்ள ஒரு ஏ.டி.எம் மையத்துக்குப் பணம் எடுப்பதற்காக வெள்ளிக்கிழமை சென்றுள்ளாா்.

அப்போது, அங்கு நின்றிருந்த இளைஞா் ஏ.டி.எம் அட்டையைத் தருமாறும், பணம் எடுத்துத் தருவதாகவும்

கூறியுள்ளாா். ரவியும் ஏ.டி.எம் அட்டையைக் கொடுத்துள்ளாா். இதையடுத்து, அந்த இளைஞா் ரூ.1,000 பணம் எடுத்துக் கொடுத்து விட்டு, ரவியின் ஏ.டி.எம் அட்டைக்கு பதிலாக, போலியான ஏ.டி.எம். அட்டையைக் கொடுத்துச் சென்றுள்ளாா்.

சிறிது நேரம் கழித்து ரவியின் வங்கிக் கணக்கில் இருந்து இரண்டு முறை தலா ரூ.10 ஆயிரமும், ஒரு முறை ரூ.25 ஆயிரமும் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த ரவி, போத்தனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் மோசடியில் ஈடுபட்ட இளைஞரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT